தான் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு இலங்கைக்கு மீண்டும் திரும்பும் வரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துத் தொடர்வில், எந்தவித விமர்ஷனமோ, கருத்துக்களோ தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் சகல எம்.பி.க்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினால் நடாத்தப்படவிருந்த சகல ஊடகவியலாளர் சந்திப்புக்களும் பிரதமரினால் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் நாடு திரும்பிய பின்னர், ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்துமாறும் அவர் கேட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வெளிநாட்டு விஜயத்தை முடித்துக் கொண்டு எதிர்வரும் 21 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (மு)



