Thursday, November 17, 2016

thumbnail

ஜப்பானில் மனித முகங்களைப் போன்ற பாறைகளைக் கொண்ட அருங்காட்சியகம்

ஜப்பானின் Chichibu நகரில் அமைந்துள்ள பாறைகள் அருங்காட்சியகத்திற்கு தனிச்சிறப்புண்டு. காரணம், இங்குள்ள 1700 பாறைகள் மனிதர்களின் முகங்களை ஒத்திருப்பது தான்.
ஏனைய பாறைகள் மிக்கி மவுஸ் உள்ளிட்ட கார்ட்டூன்களின் முக அமைப்பை ஒத்திருக்கின்றன.
Shozo Hayama என்பவர் 50 வருடங்களாக இந்த பாறை உருவங்களை சேகரித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்ததன் பின்னர் அவரது மனைவி Yoshiko Hayama வினால் இந்த அருங்காட்சியகம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
இயற்கையை விஞ்சிய ஓவியர்கள் உலகில் இல்லை என்பதே Shozo Hayama வின் நம்பிக்கையாக இருந்தது.
அதனடிப்படையிலேயே, அவர் இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார்.
இங்கு சாதாரண மனிதர்களின் முகங்களில் இருந்து இசைக்கலைஞர் எல்விஸ் பிரெஸ்லி, முன்னாள் ரஷ்ய அதிபர் மிக்கைல் கார்பச்சேவ் ஆகிய பிரபலங்களின் முகங்களை ஒத்த பாறைகள் வரை காணப்படுகின்றன.
Read More»

Saturday, October 29, 2016

thumbnail

இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்

எம்.ஜே.எம்.சஜீத்

கிழக்கு மாகாண சபை அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரபட்சமாக செயற்பட்டு இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.
                                                                                                                        எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சி நடைபெறுகிறது எனக் கூறிக் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரபட்சமாக செயற்பட்டு இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்த வேண்டாமென கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 65வது சபை அமர்வு பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார் தலைமையில் (27) நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சபை ஊடாக செயற்படுத்தப்படும் பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி திட்டத்திற்கு பொதுவான கொள்கை அடிப்படையில் கிராமங்களை தெரிவு செய்யும் பொறிமுறை ஒன்றை உருவாக்கக் கோரும்; தனிநபர் பிரேரனை ஒன்றினை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டும் இச்செயற்பாடானது கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கிடையில் முரன்பாட்டினையும், புரிந்துணர்வின்மையையும் ஏற்படுத்தும் எனவே கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும். கிழக்கு மாகாண சபை ஊடாக வறுமைக் கோட்டின் கீழ் மக்கள் வாழும் பின்தங்கிய கிராமங்களை இனங்கண்டு அபிவிருத்தி செய்து இம்மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்குடன் 2016ம் வருடத்தில் 105 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மிகவும் பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்கள் திட்டமிட்டு புறக்கணிகக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு ஒரு பக்கச்சார்பான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கிழக்கில் நல்லாட்சிக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் முறையற்ற வகையில் கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பகிரங்கமாகவே கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களால் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது. இது கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளுக்கு களங்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் எல்லாக் கட்சிகளும், எல்லா சமூகங்களும் இணைந்து மிகவும் வெளிப்பாட்டுத் தன்மையாகவும் மற்றும் அரசியல் பழிவாங்களின்றி எல்லா இடங்களையும், மதங்களையும் சமமாக மதித்து பங்கீடு செய்கின்ற ஒரு நிலைப்பாட்டில் கிழக்கு மாகாண சபை நிருவாகம் செயற்படுன்கிறது என்றும், நமது நாட்டில் அமைந்துள்ள அனைத்து மாகாண சபைகளுக்கும் முன்னுதாரணமாக கிழக்கு மாகாண சபை மாத்திரம்; காணப்படுகிறது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் கூறிய கருத்துக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் பிரதேசங்களையும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் அடையாளப்படுத்தி பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி திட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கடந்த மாகாண சபையின் ஆட்சிக் காலத்தில் கட்சி ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன இதனால் எந்தப்பிரச்சிணைகளுமின்றி அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

நல்லாட்சி என்ற பெயரில் நடைபெறும் கிழக்கு மாகாண சபை நிருவாகத்தினை ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர்களும், தமிழ் தேசிக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபையின் நல்லாட்சியில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என தங்களது கருத்துக்களை பகிரங்கமாகவே கூறுமளவிற்கு நிலைமை மாறியுள்ளது. குறிப்பாக மாகாண சபை அமர்வுகளிலும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இவ்விடயமாக தர்க்கித்துக்கொள்வதனையும் அவதானிக்க முடிகிறது.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தல் நடாத்தப்பட்டு மக்கள் பிரதி நிதிகள் தெரிவு செய்யப்பட்டால் நிச்சயமாக இன்று இயங்கிக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை பின்பற்றியே புதிய மக்கள் பிரதி நிதிகள் செயற்படுவார்கள். எனவே நாம் கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை முன்மாதிரியாக செயற்படுத் வேண்டும்.

அம்பாரை மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பிரதேசங்களான இறக்காமப் பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள இலுக்குச்சேனை, நியூகுன கிராமங்களில் பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைப்பதற்கும், இக்கிராமங்களில் வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன்;; கால்நடைகள் வழங்குவதற்காக 400 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு 37 பயனாளிகளுக்கு மாத்திரம் கால்நடைகள் வழங்கப்பட்ட நிலையில் இக்கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட 60 மில்லியன் நிதி வேறு பிரதேசங்களுக்கு அரசியல் நோக்கங்களுக்காக மாற்றப்பட்டது. 

இவ்விடயமாக கடந்த மாகாண சபை அமர்வுகளிலும் என்னால் பேசப்பட்ட போது 2016இல்; இக்கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் இச்சபையில் தெரிவித்து விட்டு தற்போது 2017ஆம் ஆண்டில் இக்கிராமங்களை இணைத்துக்கொள்வதாக தெரிவத்துள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Read More»

Friday, October 28, 2016

thumbnail

 'வற்'னால் ரூ. 100 பில்லியன் வருமானம்

எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் பெறுமதி சேர் (வற்) வரி அதிகரிப்பு காரணமாக, அரசாங்கத்துக்கு 100 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, அரச நிதிக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.செனவிரத்ன, தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read More»

thumbnail

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தை மட்டக்களப்பு நகரில் அமைக்க மாகாண சபையில் தீர்மானம்

எம்.ஜே. எம். சஜீத்
இலங்கை குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தென் மாகாணத்தில் மாத்தறை நகரிலும், மத்திய மாகாணத்தில் கண்டி நகரிலும், வட மாகாணத்தில் வவுனியா நகரிலும் பிராந்திய காரியாலயங்கள் அமைத்து மாகாண மட்டத்தில் கடவுச் சீட்டுக்களை வழங்கும் நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. இதனால் மேற்குறித்த மாகாணங்களில் வாழும் மக்கள் பெரும் நன்மை அடைந்து வருகின்றனர்.
கிழக்கு மாகாண மக்கள் தங்களின் கடவுச் சீட்டுக்களைப் பெறுவதற்காக கொழும்பு நகருக்கு நீண்ட தூரம் பிரயானம் செய்து பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி கிழக்கு மாகாணத்தில் மத்திய மாவட்டமாகத் திகழும் மட்டக்களப்பு நகரில் இலங்கை குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் காரியாலயத்தினை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களையும், கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களையும், மத்திய அரசாங்க உள்நாட்டு அலுவல்கள் , வட மேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி.நாவின்ன அவர்களையும் கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடுக்க வேண்டும் என்ற தனிநபர் பிரேரணை கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் 65வது சபை அமர்வு பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார் தலைமையில் (27) நடைபெற்றது.
இத்தனிநபர் பிரேரணையில் உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் பணிமனையினையும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் பணிமனையினையும் நான் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கிழக்கு மத்தியாக திகழும் மட்டக்களப்பு நகரில் இயங்க வைத்தோம்.
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தை மட்டகளப்பு நகரில் அமைப்பதற்கு கிழக்கு மாகாண சபை நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதனை அடுத்து குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தை மட்டக்களப்பு நகரில் அமைக்க ஏகமானதாக கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Read More»

Monday, October 24, 2016

thumbnail

பேராசிரியர் ஆனந்த சமரசேகர தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானம்

தாம் கைதுசெய்யப்படுவதை தடுக்குமாறு கோரி கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, பிரதம நீதியரசர் கே. ஶ்ரீபவன் மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியினால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், அடிப்படை உரிமைகள் தொடர்பான அவரது மனுவை அடுத்த பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.
றக்பி வீரர் வசீம் தாஜுடீனின் மரணம் தொடர்பாக இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது பெற்றுக்கொண்ட, அவரது உடற்பாகங்கள் காணாமற்போன சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தம்மை கைதுசெய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே தாம் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு ஆனந்த சமரசேகர உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தமது அடிப்படை உரிமை மனுவில் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More»

thumbnail

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகளை ஆராய நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் பொலிஸ் விசாரணைகளை ஆராய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் பொருட்டு ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் ஒருவரை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே குறிப்பிட்டார்.
அந்த அதிகாரியினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் பிரகாரம் தேவையான முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் அந்த அதிகாரியினால் இன்று விசாரணை நடத்தப்பட்டு, பொலிஸ் ஆணைக்குழு தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆரியதாச குரே தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பில் இரகசிய பொலிஸரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து பொலிஸ் ஆணைக்குழு அதிகாரி கண்காணிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Read More»

Sunday, October 23, 2016

thumbnail

பாயிஸுக்கு தேசியப் பட்டியலா..?


முன்னாள் பிரதியமைச்சரும் புத்தளம் முன்னாள் நகரபிதாவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான கே.பாயிஸ் தேசியப் பட்டியலில் MP பதவி வழங்க வேண்டுமென மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமிடம் பாயிஸின் ஆதரவாளர்கள் ஹக்கீமிடம் வழியுறுத்தியதன் காரணமாக மு.கா தலைவர் அதற்கு இணக்கம் தெரிவித்து எழுத்து மூலம் உறுதி மொழி வழங்கியுள்ளதாக பாயிஸின் ஆதரவாலர்கள் தெரிவித்தனர்.  ஏற்கனவே புத்தளம் மாவட்டத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முலம் நவவி நியமிக்கப்பட்டது போல பாயிசும் MP ஆகினால் புத்தளம் மாவட்டம் இரண்டாவது MP ஐப் பெற்று புத்தளம் மாவட்டம் அபிவிருத்தியில் முன்னேறும் எனும் தெரிவிக்கப்படுகின்றது. 
               
K.நஜாஸ் - புத்தளம்
Read More»

Sunday, October 16, 2016

thumbnail

காணிகளை விடுவிக்கக் கோரி ஜெனீவா செல்ல வேண்டும் என சில அதிகாரிகள் நினைக்கின்றார்களா?


(ஆதம்)
எமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தில் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் அதிகாரிகள் மத்தியில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சிணைகளை இலகுவாக தீர்த்து வைப்பதற்கான மன நிலையில் வனவள உயர் அதிகாரிகள் செயல்பட வேண்டும் இல்லையெனில் மக்கள் ஜெனீவா சென்று இவைகளை முறையிட வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்களா என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் ஏ.எம் மஜீட் தலைமையில் (13) நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தில் வேங்காமம், பள்ளியான் வட்டை, துக்வல்ல, தகரம்பளை, கனகர் கிராமம், கோமாரி காணிகளை விவசாயம் செய்வதற்கு வன அதிகாரிகள் தடையாக இருப்பது தெரிய வருகிறது. கனகர் கிராமம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் அவர்களினால் 60ஆம் கட்டையில் உருவாக்கப்பட்ட கிராமமாகும். இப்பிரதேசத்தில அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் வட, கிழக்கில் கடந்த 30வருடகாலமாக நிகழ்ந்த கொடூர யுத்தத்தினால் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்த காணிகளுக்குள் எமது மக்கள் செல்ல முடியாத நிலமை ஏற்பட்டது. குறிப்பாக எமது மக்களின் பாரம்பரிய நீர்ப்பாசன அனைக்கட்டுக்களை திருத்துவதற்குக்கூட வன விலங்கு திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டுமென்ற புதிய நிலைமையை சில அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

Read More»

Saturday, October 15, 2016

thumbnail

இன்று மோடி - மைத்திரி சந்திப்பு


பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பங்கேற்கவுள்ளார். 

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை 06.50 அளவில் இலங்கையில் இருந்து அவர் இந்தியா புறப்பட்டுச் சென்றார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

இதேவேளை இந்த விஜயத்தின் போது மைத்திரிபால சிறிசேன பிற நாடுகள் சிலவற்றின் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். 

இதன்படி இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் அவர் அதன் பின்னர் நேபாளப் பிரதமர் மற்றும் பூட்டான் பிரதமருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 

இதனையடுத்து மியன்மார் இராஜாங்க அமைச்சருடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடுவார் எனத் தெரியவந்துள்ளது. 
Read More»

thumbnail

லசந்தவை தாமே கொன்றதாகக்கூறி இராணுவப் புலனாய்வு உறுப்பினர் தற்கொலை

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை தாமே கொலை செய்ததாகக் கூறி இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

Read More»

thumbnail

10 அரை வருடங்கள் கேட்காததை என்னிடம் இப்பொழுது கேட்கிறார்கள் – பேரியல் அஷ்ரப்

நான் பாராளுமன்றத்தில் கடந்த பத்தரை வருடங்கள் இருந்தபோது கேட்காத முஸ்லிம் விவாக சட்டத்திருத்தம் தொடர்பில் ஆட்சியில் இல்லாத என்னிடம் இப்பொழுது கேட்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ரேணுகா ஹோட்டலில் இன்று இடம்பெற்ற Search for Common Ground என்ற நிறுவனத்தின் பெண்கள் தொடர்பான ஊடக அறிக்கையிடல் செயலமர்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த செயலமர்வில் பேரியல் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
கடந்த பத்தரை வருடங்கள் நான் பாராளுமன்றத்தில் இருந்தேன் எனினும் இந்த முஸ்லிம் விவாக சட்டமாற்றம் தொடர்பாக என்னிடம் யாரும் கதைக்கவில்லை மாறாக இப்பொழுது ஆட்சியிலில்லாத என்னை அந்த முஸ்லிம் விவாக சட்ட மாற்றத்தை பெற்றுத்தருமாறு கோரினால் நான் என்ன செய்வது.
மேலும் பெண்களை நாம் நல்லவர்களாக, ஆளுமை மிக்கவர்களாக மாற்றலாம், சேவை செய்பவர்களாக மாற்றலாம். இவ்வாறான செயலமர்வுகள் மூலம் பெண்களுக்கு தகவல்களை வழங்கலாம் என்றாலும் பெண்களை நம்பி யாரும் இன்றைய நிலையில் வாக்களிக்கத்தயாரில்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும்.
மேலும் இன்று பாராளுமன்றத்திலுள்ள பெண் பிரதிநிதிகள் கூட பரம்பரை வழியாக வந்தவர்களாக இருப்பார்கள் அல்லது மக்கள் பாவப்பட்டு வாக்களித்தவர்களாக இருப்பார்கள் ஆனால் புதிதாக எந்த பெண்ணும் பாராளுமன்றம் சென்றதாக தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் பேரியல் அஷ்ரப் பிரதம விருந்திராக கலந்துகொண்டதுடன் Search for Common Ground நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் மற்றும் மும்மொழி ஊடகங்களிலும் பணியாறுகின்ற ஊடகவியலாளர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.(ச)
Read More»

thumbnail

நான் நாடு திரும்பும் வரை, ஜனாதிபதி குறித்து எதுவும் பேச வேண்டாம்- பிரதமர் உத்தரவு

தான் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு இலங்கைக்கு மீண்டும் திரும்பும் வரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துத் தொடர்வில், எந்தவித விமர்ஷனமோ, கருத்துக்களோ தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் சகல எம்.பி.க்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினால் நடாத்தப்படவிருந்த சகல ஊடகவியலாளர் சந்திப்புக்களும் பிரதமரினால் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் நாடு திரும்பிய பின்னர், ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்துமாறும் அவர் கேட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வெளிநாட்டு விஜயத்தை முடித்துக் கொண்டு எதிர்வரும் 21 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  (மு)
Read More»

thumbnail

பொத்துவில் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்

பொத்துவில் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் பொத்துவில் பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் மஜீட் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நேற்று (13) இடம்பெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல் தவம் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகேயின் இணைப்பாளர், திணைக்களத்தலைவர்கள், படை அதிகாரிகள், பொது நிறுவனங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பொத்துவில் களப்புக்கட்டு வீதி, சர்வோதய வீதியை கார்ப்பட் வீதியாக அமைத்தல், ஆத்திமுனை வீதியை கொங்கிறீட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கு அதன் அறிக்கையைப் பெற்றுக்கொள்ளல், பொத்துவில் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுத்தல், பொத்துவில் ஆதார வைத்திசாலையில் நிலவுகின்ற மனிதவள பற்றாக்குறை உட்பட சகல தேவைகளையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக நிறைவேற்றல், பொத்துவில் ஆதார வைத்தியசாலையினை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்தல், ஹெடஓயா நீர்ப்பாசனத் திட்டத்தினை ஆரம்பம் செய்யவும் அதற்கான நிதியை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளல் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொத்துவில் பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களான அமைச்சர் தயா கமகே மற்றும் பிரதி அமைச்சர் பைசல் காசீம் ஆகியோர் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம் றஸீன்
Read More»

Friday, October 14, 2016

thumbnail

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகரைக் காணவில்லை: விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகரைக் காணவில்லை: விசாரணைகள் ஆரம்பம்


கிளிநொச்சியில் வர்த்தகர் ஒருவர் காணாமற்போயுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – வரணியைச் சேர்ந்த 36 வயதான கிருஷ்ணசாமி ரதீசன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே காணாமற்போயுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் நண்பகல் முதல் காணாமற்போயுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டவர், கிளிநொச்சியில் உள்ள தனது வர்த்தக நிலையத்தைச் சென்றடையவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக அவர் தலைமறைவாகியிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவர் கடத்தப்பட்டிருப்பதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக அவரின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததாக வர்த்தகரின் மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
காணாமற்போன தினத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வர்த்தக நிலையத்தில் நிறுத்திவிட்டு, தனியாக நடந்து சென்றுள்ளமை சி.சி.ரி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
மேலும், அவருடைய தொலைபேசி அழைப்புகள் தொடர்பான பதிவுகளைப் பெறுவதற்கான நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More»

thumbnail

ஐ.நா வின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர், கிழக்கு மாகாண முதல்வரிடையே சந்திப்பு

ஐ.நா வின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர், கிழக்கு மாகாண முதல்வரிடையே சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் இசாக் ரீட்டா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில், இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சிறுபான்மையினரின் நலன் குறித்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் தொர்போஜோன் கோஸ்டாசேதாருக்கும் இடையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.
Read More»

thumbnail

சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் நடைபயணம் மதவாச்சியை அடைந்தது

சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் நடைபயணம் மதவாச்சியை அடைந்தது
கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடைபயணம் இன்று மதவாச்சியை சென்றடைந்தது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளை அடுத்து, இன்றைய நடைபயணம் ஆரம்பமானது.
இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான மஹேல ஜயவர்தன உள்ளிட்ட பலர் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நடைபயணத்திற்கு வவுனியா நகர எல்லையில், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் இணைந்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
வடக்கின் பருத்தித்துறையில் கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமான இந்த நடைபயணம், எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி தெய்வேந்திரமுனையில் நிறைவடையவுள்ளது.
Read More»

thumbnail

துமிந்த சில்வா உள்ளிட்ட அரசியல்வாதிகள் நால்வர் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சிகிச்சை

துமிந்த சில்வா உள்ளிட்ட அரசியல்வாதிகள் நால்வர் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சிகிச்சை
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வைரஸ் காய்ச்சல் காரணமாக சில வாரங்களாக சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஆகியோரும் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தேயும், சகோதரரான சானுக ரத்வத்தேயும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு கைதியும் சுகவீனமுற்றால் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற முடியும் என சிறைச்சாலை வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி லக்ஸ்மன் ஜயமான்ன தெரிவித்தார்.
எனினும், நீதிமன்ற உத்தரவு காணப்பட்டால் மாத்திரமே, கைதி ஒருவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
Read More»

thumbnail

மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மரணம்: விசாரணைகள் ஆரம்பம்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மரணம்: விசாரணைகள் ஆரம்பம்
சுகவீனமடைந்த நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதியில் பிரேதப் பரிசோதனை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
எவ்வாறாயினும், அந்த யுவதி உயிரிழந்த நிலையிலேயே வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
அடையாளந்தெரியாத நபர் ஒருவர் 27 வயதான குறித்த யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
யுவதி தொடர்பில் தமக்கு எந்தத் தகவலும் தெரியாது எனக்கூறியே அந்நபர் யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்ததாக வைத்தியசாலை பேச்சாளர் கூறினார்.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் உயிரிழந்த யுவதி மருதமுனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், வைத்தியசாலையில் அனுமதித்த நபர் கண்டியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே உயிரிழந்த நிலையில் சடலம் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதால், இது குறித்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரே பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More»

Discussion

© Copyright © All rights reserved.

Designed By Sifi Web Solution

back to top